செம்மேடு கெடிலம் ஆற்றங்கரை பலப்படுத்தும் பணி துவங்கியது
பண்ருட்டி : செம்மேடு, எலந்தம்பட்டு, சிறுவத்துார் கெடிலம் ஆற்றங்கரையில் 36 கோடி ரூபாய் மதிப்பில் நீர்வளத்துறை சார்பில் பலப்படுத்தும் பணி துவங்கியது. கெடிலம் ஆற்றங்கரையில் இருபுறமும் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டுதல் மற்றும் கரைகளை பலப்படுத்தும் பணி செம்மேடு கெடிலம் ஆற்றங்கரையில் நேற்று துவங்கியது. நிகழ்ச்சிக்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைச்சர் கணேசன் பூமி பூஜை நடத்தி பணியை துவக்கி வைத்து கூறுகையில், 'மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து தமிழக முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 36 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற உள்ள இந்த பணியால் வீரபெருமாநல்லுார், திருவாமூர், எலந்தம்பட்டு, செம்மேடு, கருக்கை கிராமங்கள் மற்றும் 3,000 ஏக்கர் நிலம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும்' என்றார். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கூறுகையில், 'இந்த திட்டம் வெள்ள பாதிப்புகளை குறைக்கவும், பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவும்' என்றார். நிகழ்ச்சியில் நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் பாலமுருகன், ரஜினிகாந்த், தாசில்தார் பிரகாஷ், பி.டி.ஓ.,க்கள் மீரா கோமதி, பாபு, முன்னாள் பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் சந்தோஷ் குமார், குணசேகரன், தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பா ளர் ஆனந்தன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் சத்தியமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.