மேலும் செய்திகள்
கொல்லிமலை பி.டி.ஓ., மாற்றம்
30-Jun-2025
புவனகிரி: மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் 75 பேர் நேற்று காலை 11:00 மணிக்கு திரண்டனர். பின், கீழமூங்கிலடி ஊராட்சியில் மூன்று கிராமங்களுக்கு 2 பணித்தள பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில், 2 பணித்தள பொறுப்பாளர்களையும் இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல் பரவுகிறது. எனவே, 2 பணித்தள பொறுப்பாளர்களையும் இடமாற்றம் செய்யக் கூடாது எனக் கூறி அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. உடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து போராட்டத்தை தொழிலாளரள்கள் கைவிட்டு கோரிக்கை மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.
30-Jun-2025