உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கத்தியுடன் ரகளை வாலிபர் கைது

கத்தியுடன் ரகளை வாலிபர் கைது

விருத்தாசலம்: பொது இடத்தில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் பழமலைநாதர் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் ஹாஜி முகமது மகன் முகமது ஷாருக்கான்,18. இவர், இன்று (நவ.,19) மாலை பொது மக்களை அச்சுறுத்தும் வகையில், பொது இடத்தில் கையில் கத்தியுடன் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். தகவலறிந்த இன்ஸ்பெக்டர் சந்துரு உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று, அவரை பிடித்து விசாரித்தனர். இவர், அடிக்கடி இதுபோல் ரகளையில் ஈடுபடுவது தெரிந்தது. இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, ஷாருக்கானை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி