மேலும் செய்திகள்
பீகார் பெண் மர்ம சாவு போலீசார் விசாரணை
26-May-2025
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் டீக்கடை உரிமையாளரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், மலப்புரம், திருவரங்காடி பகுதியைச் சேர்ந்தவர் ஷாதுதின், 44; இவர், விருத்தாசலம், சித்தலுார் ரவுண்டானா அருகே டீ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் கடைக்கு நேற்று முன்தினம் டீ குடிக்க வந்த சித்தலுார் பகுதியைச் சேர்ந்த நளமகாராஜன், தமிழ்ச்செல்வன், நமச்சிவாயம், 22; ஆகியோர் ரவா லட்டுக்கு, டொமாட்டோ சாஸ் கேட்டனர்.அப்போது சாஸ் தர மறுத்த ஷாதுதினை, மூவரும் திட்டி தாக்கினர். தடுக்க வந்த கடை ஊழியர்கள் நிஷாக், சாதிக் ஆகி யோரையும் சரமாரியாக தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். இதில், படுகாயமடைந்த மூவரும் விருத் தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட் டனர்.புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து நமச்சிவாயத்தை கைது செய்து, மற்ற இருவரை தேடி வருகின்றனர்.
26-May-2025