உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக்கில் ஆற்றுமணல் கடத்தல்: வாலிபர் கைது 

பைக்கில் ஆற்றுமணல் கடத்தல்: வாலிபர் கைது 

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பைக்கில் ஆற்றுமணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று மணவாளநல்லுார் மணிமுக்தாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராமச்சந்திரன்பேட்டை, விருத்தாம்பிகை நகரைச் சேர்ந்த முத்துகருப்பன் மகன் ராஜசேகர், 30; என்பவர் தனது பைக்கில், கள்ளத்தனமாக சாக்கு மூட்டைகளில் ஆற்றுமணல் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, பைக்கை பறிமுதல் செய்து, ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை