உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புமாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புமாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புமாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்தர்மபுரி, :தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வை கண்காணிக்க, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது:தர்மபுரி மாவட்டத்தில், கொத்தடிமை தொழிலாளர் கணக்கெடுப்பு பணியின் இறுதி அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்து பலமுறை கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.இந்த கணக்கெடுப்பு பணியின் அறிக்கையில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து இறுதி அறிக்கையை விரைந்து சமர்பிக்க வேண்டும். தொழிலாளர்களை மீட்டெடுத்தல் தொடர்பான புகார் பெறப்பட்ட உடன், 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விடுதலை சான்று வழங்கப்படுவதோடு, உடனடி நிவாரண தொகையும் வழங்கப்படுகிறது. வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் விருப்பத்தின் படி, வேலைவாய்ப்பு துறையின் மூலம் வழங்கப்படும், 'ஸ்கில் டிரைனிங் புரோகிராம்' மூலம், பயிற்சிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை, தொண்டு நிறுவனங்கள், நாட்டுப்புற மற்றும் நாடக கலைஞர்கள் மூலம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தை கொத்தடிமை தொழிலாளர்கள் அல்லாத மாவட்டமாக மாற்ற, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.இதில், ஆர்.டி.ஓ., காயத்ரி, மாவட்ட அமலாக்க தொழிலாளர் உதவி ஆணையர் மாதேஸ்வரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சாகுல்ஹமீத் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை