உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மகளிர் சுய உதவிக்குழு பொருட்கள்சந்தை வாய்ப்புக்கு சந்திப்பு கூட்டம்

மகளிர் சுய உதவிக்குழு பொருட்கள்சந்தை வாய்ப்புக்கு சந்திப்பு கூட்டம்

மகளிர் சுய உதவிக்குழு பொருட்கள்சந்தை வாய்ப்புக்கு சந்திப்பு கூட்டம்தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், குமாரசாமிபேட்டை, செங்குந்தர் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் பொருட்டு, மொத்த கொள்முதலாளர்களிடம் விற்பனை செய்ய ஏதுவாக நடந்த மாவட்ட அளவிலான வாங்குவோர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சந்திப்பு கூட்டத்தை கலெக்டர் சதீஸ் தொடங்கி வைத்தார். இதில், தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 10 வட்டாரங்கள், தர்மபுரி நகராட்சி மற்றும் அனைத்து பேரூராட்சிகளிலுள்ள சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களான சிறுதானியங்கள், சணல் பைகள், பூஜை பொருட்கள், ஊறுகாய் வகைகள், உலர் கருவாடு, மசாலா வகைகள், தேன் மதிப்பு கூட்டு பொருட்கள், எண்ணெய் வகைகள், துணி வகைகள், சோப்பு வகைகள், மண் பொம்மைகள் மற்றும் கைவினை பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து, நேரடியாக கொள்முதல் செய்வதற்கு உரிய அரங்குகளில் காட்சி படுத்தப்பட்டன.அனைத்து மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தியாளர்களும் தங்கள் பொருட்களுக்கான விற்பனை ஒப்பந்தங்களை மேற்கொண்டன. கலெக்டர் சதீஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில், 54 நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுடன், 2.35 கோடி ரூபாய் அளவிலான வணிக ஒப்பந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டன.இதில், மகளிர் திட்ட அலுவலர் லலிதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், வேளாண் வணிக துணை இயக்குனர் இளங்கோ, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி அலுவலர் கவுரி, மாவட்ட தொழில்மையம் உதவி இயக்குனர் பாண்டியன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ