உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி : தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் செல்வி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாமரைச்செல்வி முன்னிலை வகித்தார். இதில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டப்பணிகளை, சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். கிராம செவிலியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளுக்கு முரணாக, அரசு ஆணைக்கு எதிராக இதர பணி மற்றும் கணினி பணிக்கு உட்படுத்துவதை நிறுத்த வேண்டும். கணினி பணிக்கு என தனியாக டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்களை நியமிக்க வேண்டும். பெண் சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை