தீர்த்தமலையில் பிளாஸ்டிக் கழிவுவனச்சூழல் பாதிக்கும் அபாயம்
தீர்த்தமலையில் பிளாஸ்டிக் கழிவுவனச்சூழல் பாதிக்கும் அபாயம்அரூர் :தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த, தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராடுவதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, தினமும், 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், தீர்த்தமலை மலைக்கோவிலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பலர், உணவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை மலைப்பாதையோரத்தில் உள்ள வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். இதனால், ஆங்காங்கே பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்துள்ளதுடன், சுற்றுச் சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தீர்த்தமலையில் பிளாஸ்டிக் கழிவுகள் வீசி செல்வதை தடுக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல்-ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.