மேலும் செய்திகள்
அரூரில் பரவலான மழை
07-Aug-2024
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக, அவ்வப்போது, ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மிதமான சாரல் மழை பெய்-தது. அதன் பின், மாவட்டம் முழுவதும் தொடர்ந்து, மிதமான வெப்பநிலை நிலவியது. இந்நிலையில் நேற்று காலை முதல் வெப்பச்சலனம் சற்று அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து மாலை, 4:00 மணி முதல் தர்மபுரி டவுன் மற்றும் அதை சுற்றி-யுள்ள பகுதிகளில் விட்டு விட்டு, கன மழை பெய்தது. இதனால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.அரூர் மற்றும் சுற்று வட்-டாரத்தில், நேற்று மாலை, 5:30 முதல், இரவு, 6:45 மணிக்கு மேலாகியும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சூறைக்-காற்றால், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் விளம்பர பலகைகள் துாக்கி வீசப்பட்டன. கனமழையால் அரூரில், நான்கு ரோடு, திரு.வி.க., நகர், பாட்சாபேட்டை உள்ளிட்ட இடங்களில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
07-Aug-2024