உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பெண் குழந்தை உயிரிழப்பு

பெண் குழந்தை உயிரிழப்பு

பெண் குழந்தை உயிரிழப்புகாரிமங்கலம்,:தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த ஜோதிப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன், 27. லாரி டிரைவர். இவர் மனைவி கவுசல்யா, 22. இவர்களுக்கு, 3 வயதில் மகன் உள்ளார்.கடந்த, 44 நாட்களுக்கு முன், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், அறுவை சிகிச்சை மூலம் கவுசல்யாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. 7 நாள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். நல்ல ஆரோக்கியமாக இருந்த பெண் குழந்தைக்கு கடந்த, 22ல் மதியம், 12:30 மணிக்கு, கவுசல்யா தாய்ப்பால் கொடுத்து விட்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார்.சிறிது நேரத்தில் குழந்தையின் வாயிலும் மூக்கிலும் நுரை வந்துள்ளது. குழந்தையை, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ