மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
மாணவர்களுக்கு பரிசு வழங்கல்நல்லம்பள்ளி, : தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, இப்பள்ளி வளாகத்திற்கு பேவர் பிளாக் கல் பதிக்கும் பணியை, பா.ம.க., -எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் துவக்கி வைத்தார். தொடர்ந்து, பள்ளியில் நடந்த ஆண்டுவிழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பொதுத்தேர்வில் முதல், 3 இடங்களில் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு, கேடயம் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் தங்கராசு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஞானவடிவேல் குமரன், துணைத்தலைவர் தனபால், பொருளாளர் சிவப்பிரகாசம் உள்பட பலர் உடனிருந்தனர்.