மகளிர் திட்ட கட்டடத்தில் கடைகளுக்கு பூட்டு
மகளிர் திட்ட கட்டடத்தில் கடைகளுக்கு பூட்டுதர்மபுரி:தர்மபுரியில், டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே, நகராட்சிக்கு சொந்தமான இடத்தில், பூமாலை வணிக வளாகம் கட்டப்பட்டு, மகளிர் திட்ட கட்டுப்பாட்டில் உள்ளது. இதில், 25 கடைகள் உள்ளன. இதில், 11 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு, பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யும் சிறு, குறு கடைகள் மற்றும் சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்கின. தர்மபுரி நகராட்சி அதிகாரிகள், நேற்று வணிக வளாகத்திலுள்ள, கடைகளில் இருந்த அனைவரையும் வெளியேற்றி, 1.51 லட்சம் ரூபாய் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி ஒரு வருடமாக நிலுவையில் உள்ளது. அதற்காக, 20 நாட்களுக்கு முன்னறிவிப்பு வெளியிட்டும் வரி செலுத்தவில்லை எனக்கூறி, 11 கடைகளை பூட்டினர்.கடைகளை வாடகைக்கு எடுத்தோர், மாதாந்திர வாடகையை மகளிர் திட்டத்தில் செலுத்தியிருந்தனர். இதில், கடையில் உள்ளவர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, கடைகள் பூட்டப்பட்டதால், செய்வதறியாது தவித்தனர்.இதில், மருத்துவ நல அலுவலர் லட்சிய வர்ணா, மேனேஜர் முத்துகுமார், பொறியாளர் புவனேஸ்வரி, நகர்நல அலுவலர் ஜெயவர்மன், ஆர்.ஐ., மாதையன் உட்பட நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.மருத்துவமனை விளக்கம்தனியார் மருத்துவமனை மருத்துவர் குமுதா கூறியதாவது:நந்தினி, திருமணமான புதிதில் இருந்து ஆரம்பகால பரிசோதனைக்கு தொடர்ந்து, எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். ஆரம்பத்தில் இருந்து எந்த ஒரு பிரச்னையும் இல்லை. கடந்த, 20ம் தேதியன்று நிறை மாதத்தில் பிரசவ வலி ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, எல்லா மருத்துவமனையிலும் செய்வது போல், ஆண்டிபயோடிக் டெஸ்ட் ஊசி ஒரு டிராப் செலுத்தப்பட்டதும், நந்தினிக்கு அலர்ஜி ஏற்பட்டது. ரத்த அழுத்தமும் அதிகமானது. அலர்ஜி மற்றும் ஒரு குழந்தை தலை திரும்பி இருந்ததால், சிசேரியன் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. டெஸ்ட் டோஸ், நந்தினி உடலுக்கு ஏற்றுக்கொள்ளாததால், உயர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்காக, என் மருமகளான மருத்துவர் ரம்யா நேரடியாக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மருத்துவர்களிடம் எங்கள் மருத்துவமனையில் அளித்த சிகிச்சை விபரம் குறித்து தெளிவாக எடுத்துரைத்து, நந்தினியை அட்மிட் செய்து விட்டு வந்தார். மற்றபடி சிகிச்சை விவகாரத்தில் எந்தவித ஒளிவு மறைவும் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.