மோடி பிறந்த நாளில் நல உதவி
அரூர்: அரூர் அடுத்த தீர்த்த மலையில், பா.ஜ., சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தீர்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகளுக்கு பால் மற்றும் பிரட் வழங்கப்பட்டது. விழாவில், நிர்வாகிகள் ராஜேந்திரன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.* கடத்துார் ஒன்றியம் இராமியனஹள்ளியில், பா.ஜ., கிழக்கு ஒன்றிய தலைவர் சிற்றரசு தலைமையில், பிரதமர் மோடியின், 74வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன் அப் பகுதியில், பா.ஜ., கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மகளிரணி தலைவர் சுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.* பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில், பா.ஜ., நகர தலைவர் கணேசன் தலைமையில் மோடி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் பாஸ்கர், பா.ஜ., கொடியேற்றி, இனிப்பு வழங்கி பேசினார். பொதுசெயலாளர் வெங்கட்ராஜ், செயலாளர் தெய்வமணி, துணைத் தலைவர் முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின், பொதுமக்கள், 1,000 பேருக்கு இலவச தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பா.ஜ., மாவட்ட, ஒன்றிய, மண்டல பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.