உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / முதியோருக்கு போர்வை வழங்கல்

முதியோருக்கு போர்வை வழங்கல்

முதியோருக்கு போர்வை வழங்கல்பாப்பிரெட்டிப்பட்டி, :பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள ஏழை எளியவர்கள், முதியவர்கள் குளிரில் பாதித்து வருகின்றனர். இதையடுத்து, தி.மு.க., சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் மாரி ஏற்பாட்டில், 150 முதியவர்களுக்கு தர்மபுரி தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் போர்வைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஜெயச்சந்திரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி