உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பொதுமக்கள்குறைதீர் முகாம்

பொதுமக்கள்குறைதீர் முகாம்

பொதுமக்கள்குறைதீர் முகாம்தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் குறித்த மனுக்கள் மீதான, குறைதீர் முகாம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் வார புதன்கிழமைகளில் நடக்கிறது.நேற்று, தர்மபுரி மாவட்ட, எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில் நடந்த முகாமில், ஏற்கனவே பெறப்பட்ட, 75 மனுக்கள் மீது விசாரணை நடத்தி, 46 மனுக்களின் பிரச்னைகள் தீர்த்து வைக்கப்பட்டது.மேலும், புதிதாக, 29 மனுக்கள் பெறப்பட்டது. இதில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் பாலசுப்பிரமணியன், ஸ்ரீதரன், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை