உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பயன்பாடின்றி மேல்நிலை குடிநீர் தொட்டி

பயன்பாடின்றி மேல்நிலை குடிநீர் தொட்டி

பயன்பாடின்றி மேல்நிலை குடிநீர் தொட்டிபாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள, 15 வார்டுகளில், 15,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் வழங்க பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் பின்புறம், மூன்று லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இதன் மூலம் ஒகேனக்கல் குடிநீர், வாணியாறு அணை தண்ணீர், இரண்டும் பேரூராட்சி பகுதி மக்களுக்கு வழங்கப்படுகிறது.இது போதுமானதாக இல்லாததால், மாரியம்மன் கோவில் அருகில், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 32 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதலாக, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும்போது, செம்புவராயன் கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை தீரும். ஆனால், இந்த குடிநீர் தொட்டிக்கு பரிசோதனைக்காக மட்டுமே குடிநீர் ஏற்றப்பட்டது. அதன் பிறகு, மக்களுக்கு வினியோகம் செய்ய குடிநீர் ஏற்றப்படவில்லை. இதனால் குடிநீர் பற்றாக்குறையால் தினமும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக குடிநீர் ஏற்றப்படாததால், மேல்நிலை நீர்தேக்க தொட்டி காட்சி பொருளாகவே உள்ளது. ஆகவே, இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு, குடிநீர் ஏற்றி மக்களுக்கு, வினியோகம் செய்ய, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ