உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உலக சுகாதார தினம்விழிப்புணர்வு பேரணி

உலக சுகாதார தினம்விழிப்புணர்வு பேரணி

உலக சுகாதார தினம்விழிப்புணர்வு பேரணிதர்மபுரி:இந்திய மருத்துவ சங்கத்தின், தர்மபுரி கிளை சார்பில், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நடந்த, விழிப்புணர்வு பேரணியை, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி முன் தொடங்கி வைத்தார். இதில், சாலை பாதுகாப்பு, வளரிளம் குழந்தைகளின் ஆரோக்கியம், போதைபொருள் தடுப்பு, காசநோய் குறித்த விழிப்புணர்வு, ரத்தம் மற்றும் உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வுகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கல்லுாரி மாணவ, மாணவியர் ஊர்வலமாக சென்றனர்.பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியவாறு, தர்மபுரி, நான்கு ரோடு வரை சென்றனர். மேலும், பசுமை பாதுகாப்பை அனைவருக்கும் உணர்த்தும் வகையில், பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.இதில், தர்மபுரி மருத்துவ கல்லுாரி டீன் அமுதவல்லி, ஊரக நலப்பணிகள் துணை இயக்குனர் சாந்தி, தர்மபுரி டி.எஸ்.பி., சிவராமன், தர்மபுரி நகராட்சி சுகாதார அலுவலர் லட்சியவர்ணா, மாவட்ட விளையாட்டு நல அலுவலர் சாந்தி, இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் சண்முகப்பிரியா, வேலவன், கோமதி உட்பட கல்லுாரி மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை