உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வரட்டாறு தடுப்பணையை சீரமைக்க வேண்டுகோள்

வரட்டாறு தடுப்பணையை சீரமைக்க வேண்டுகோள்

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. தடுப்பணையின் மொத்த கொள்ளளவு, 34.45 அடி. இதிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம், 25 ஏரிகள் நிரம்புவதுடன், 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.இந்நிலையில் தடுப்பணைக்கு செல்லும் தார்ச்சாலை ஜல்லிக் கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதுடன், முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. மேலும், கரைப்பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து கற்கள் பெயர்ந்துள்ளது. எனவே, வரட்டாறு தடுப்பணையை சீரமைக்க, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ