மேலும் செய்திகள்
மனைவியுடன் தகராறு : கணவர் மாயம்
17-Oct-2025
பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி அடுத்த பி.பள்ளிப்பட்டி லுார்துபுரத்தை சேர்ந்தவர் கபில்தேவ்,38; கூலி தொழிலாளி. இவரது சகோதரர் ரோமன் ரீகன், 45; மூதாதையருக்கு சொந்தமான இடத்தில் தனித்தனியாக குடியிருந்து வருகின்றனர். இதில் அனைத்து வீடுகளுக்கும் மின் மீட்டர், ரோமன் ரீகன் வீட்டு பாத்ரூமில் இருந்து வருகிறது. இதை மாற்ற முற்பட்ட போது இருவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டது.நேற்று முன்தினம் இரவு, தன் தாய் ரோஸ்மேரியை பார்க்க மகள் லியோவுடன் கபில்தேவ் சென்றார். அப்போது ரோமன் ரீகன், லியோவை தகாத வார்த்தையால் திட்டினார். கபில்தேவ் தட்டி கேட்டதில் ரோமன் ரீகன் கொடுவாளால் வெட்டினார். புகார் படி பொம்மிடி போலீசார் ரோமன் ரீகனை, கைது செய்தனர்.
17-Oct-2025