உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளியில் பழங்கால நாணய கண்காட்சி

பள்ளியில் பழங்கால நாணய கண்காட்சி

தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, வாழைத்தோட்டம் அரசு உயர்நிலைப்பள்ளியில், சமூக அறிவியல் மன்றத்தின் சார்பில், பழங்கால நாணயங்கள் கண்காட்சி நேற்று நடந்தது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை தாங்கி, பழங்கால நாணயங்கள் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் பழங்கால நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள், மாதிரி பணம் ஆகியவை காட்சி படுத்தப்பட்டன. சமூக அறிவியல் ஆசிரியை, மஞ்சுளா பழங்கால நாணயங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் பணம் சார்ந்த தகவல்களை விளக்கி பேசினார். பள்ளி மாணவ, மாணவியர் நாணயங்களின் சிறப்பம்சங்கள் குறித்த விளக்கங்களை கேட்டறிந்தனர். இதில், ஆசிரியர்கள் செந்தில், உமாசங்கரி, பிரபாகரன், கார்த்திகேயன், செல்வி, லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ