உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தொழுநோய்ஒழிப்புவிழிப்புணர்வு பேரணி

தொழுநோய்ஒழிப்புவிழிப்புணர்வு பேரணி

தொழுநோய் ஒழிப்புவிழிப்புணர்வு பேரணிதர்மபுரி,: தர்மபுரியில், உலக தொழுநோய் எதிர்ப்பு தினத்தையொட்டி நடந்த விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட கலெக்டர் சாந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.காந்தி நினைவு நாளையொட்டி, ஜன., 30 அன்று உலக தொழுநோய் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட கலெக்டர் சாந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின், தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் சாந்தி மற்றும் அரசு ஊழியர்கள் ஏற்றனர். தொடர்ந்து, தொழுநோய் ஒழிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார். நிகழ்ச்சியில், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் அமுதவள்ளி, மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் ஜெயந்தி, தொழுநோய் துறை இணை இயக்குனர் புவனேஸ்வரி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி