உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாணவி கடத்தல்வாலிபருக்கு வலை

மாணவி கடத்தல்வாலிபருக்கு வலை

மாணவி கடத்தல்வாலிபருக்கு வலைமேட்டூர்:மேச்சேரி, நரியனுார் காட்டுவளவை சேர்ந்த கூலி தொழிலாளி மணி, 45, மனைவி அம்சா. தம்பதியருக்கு, 17 வயதில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். கடந்த, 25ல் பிளஸ் 2 தேர்வுக்கு மகளை அவரது தந்தை பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். தேர்வு முடிந்ததும் மாணவியை அழைக்க மணி சென்றார். அப்போது மாணவியை காணவில்லை. மாணவியை, அருகிலுள்ள தாவனுார் காட்டுவளவு வாலிபர் ஜானகிராமன் கடத்தி சென்றதாக தெரிகிறது.தனது மகளை மீட்டு தரக்கோரி, நேற்று மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மணி அளித்த புகார்படி, இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்கு பதிந்து, கடத்தப்பட்ட மாணவியை தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி