உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பென்னாகரத்தில் இஸ்லாமியர் ஆர்ப்பாட்டம்

பென்னாகரத்தில் இஸ்லாமியர் ஆர்ப்பாட்டம்

பென்னாகரத்தில்இஸ்லாமியர் ஆர்ப்பாட்டம்பென்னாகரம், வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி, பென்னாகரம் சுன்னத் ஜமாத் ஜாமிய மஸ்ஜித் முன், இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பென்னாகரம் நகர பகுதியில், இஸ்லாமியர்களின் கடைகள் முழுதும் அடைக்கப்பட்டிருந்தது. மதிய தொழுகைக்கு பின், பென்னாகரம் சுன்னத் ஜமாத் ஜாமிய மஸ்ஜித் முன், ஒன்று கூடி அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். பென்னாகரம் சுன்னத் ஜமாத் ஜாமிய மஸ்ஜித் முத்தவல்லி தெளலத்பாஷா, முஸ்தபா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தர்மபுரி மாவட்ட செயலர் கலைச்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை