உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கவனத்தை திசை திருப்பி ரூ.2 லட்சம் திருட்டு

கவனத்தை திசை திருப்பி ரூ.2 லட்சம் திருட்டு

பாப்பாரப்பட்டி : தர்மபுரி மாவட்டம், பிக்கிலி அடுத்த பி.கொல்லப்பட்டியை சேர்ந்த விவசாயி ராஜா, 60; இவர் கடந்த, 18 அன்று யமஹா பேசினோ ஸ்கூட்டரில், பாப்பாரப்பட்டி இந்தியன் வங்கியில் இருந்து, 2 லட்சம் ரூபாயை எடுத்து வந்த பின், வண்டி சீட்டின் அடியில் வைத்துக்கொண்டு, வீட்டிற்கு சென்றார். அப்போது திருமல்வாடி - பிக்கிலி கொல்லப்பட்டி சாலையில் சென்றபோது, பின்னால் வந்த நபர், 100 ரூபாய் கீழே விழுந்துள்-ளது என கவனத்தை திசை திருப்பி, வண்டியில் இருந்த, 2 லட்சம் ரூபாய் திருடிச் சென்றார்.இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ