உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உரிமம் பெறாத 2 கடைகளுக்கு சீல்

உரிமம் பெறாத 2 கடைகளுக்கு சீல்

ஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நாமல்பேட்டை, ஜனப்பர் தெரு ஆகிய பகுதிகளில், மாநகர நல அலுவலர் பிரபாகரன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, கடைகளில் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்-தது. மொத்தம், 6 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த மாநகராட்சி ஊழியர்கள், 6,000 ரூபாய் அபராதம் விதித்-தனர். மேலும், தொழில் உரிமம் பெறாமல் இயங்கிய, 2 கடைகள் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை