உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / திறனாய்வு தேர்வில் தர்மபுரி மாவட்டம் 3ம் இடம்

திறனாய்வு தேர்வில் தர்மபுரி மாவட்டம் 3ம் இடம்

திறனாய்வு தேர்வில்தர்மபுரி மாவட்டம் 3ம் இடம்தர்மபுரி, நவ. 7-அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்களின் திறனை ஊக்குவிக்க, தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வு கடந்த ஆக., 8 ல் நடந்தது. இதை எழுத, தர்மபுரி மாவட்டத்தில், 2,706 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2,556 பேர் தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வை எழுதினர். தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில், மாநில அளவில் சென்னையை சேர்ந்த, 72 மாணவர்கள் வெற்றி பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்தனர். தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, 69 மாணவர்கள் வெற்றி பெற்று, 2ம் இடம் பெற்றனர். இதில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, 66 மாணவர்கள் வெற்றி பெற்று, 3ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை