உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / போலீஸ் வாகனம் சேதம் சகோதரர்கள் இருவர் கைது

போலீஸ் வாகனம் சேதம் சகோதரர்கள் இருவர் கைது

அரூர், அரூர், அம்பேத்கர் நகரில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, அரூர் எஸ்.எஸ்.ஐ., சீனிவாசன், முதல்நிலை காவலர் சேகர் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்தவரும், அரசு பள்ளி சமையலருமான மருதபாண்டி, 34, என்பவர் ஊஞ்சல் மாரியம்மன் கோவில் அருகில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். இங்கு மது அருந்துகிறீர்களே என எஸ்.எஸ்.ஐ., சீனிவாசன் கேட்டபோது, அவரை தகாத வார்த்தையால் திட்டினார். அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றியபோது, வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை மருதபாண்டி கையால் உடைத்து சேதப்படுத்தினார். அங்கு வந்த அவரது தம்பியும் அரசு இளநிலை உதவியாளருமான ஹரிகரன், 30, என்பவர் போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்து வாகனத்தை சேதப்படுத்தினார். இதையடுத்து, மருதபாண்டி, ஹரிகரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி