உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பள்ளி மாணவர்களின் காலை உணவில் கிடந்த பல்லி

அரசு பள்ளி மாணவர்களின் காலை உணவில் கிடந்த பல்லி

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தேவரசம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதன் தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி. பள்ளியில், 1 - 5 ம் வகுப்பு வரை படிக்கும், 60 மாணவ, மாணவியருக்கு, காலை உணவு திட்டத்தில் உணவு வழங்கப்படுகிறது. நேற்று காலை வழக்கம் போல, 8:30 மணிக்கு, 3 சமையலர்கள் மாணவர்களுக்கு காலை உணவாக, உப்புமா சமைத்து பரிமாற தொடங்கினர். சிலருக்கு பரிமாறிய நிலையில், உணவில் பல்லி இறந்து கிடந்தது. உடனே, பரிமாறியதை நிறுத்தினர். மருத்துவக் குழுவினர் வந்து, உணவு சாப்பிட்ட, 19 மாணவ, மாணவியரை பரிசோதனை செய்து, ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கி, உடல் நலனை பரிசோதித்தனர். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.'உணவு சமைக்கும் போது, பல்லி விழுந்திருந்தால் அதன் உடல் சிதைந்திருக்கும். உணவு பரிமாறும்போது விழுந்ததால், அது முழுமையாக இருந்தது' என, அதிகாரிகள் கூறினர். காலை உணவில் பல்லி விழுந்த தகவல் தெரிந்த குழந்தைகளின் பெற்றோர், பள்ளியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ