| ADDED : ஜூலை 02, 2024 10:38 AM
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூரில், கடந்த சில நாட்களாக பெண்கள் சிலர் வீடு, வீடாக செல்கின்றனர். பின், வீட்டில் இருப்பவர்களிடம் தாங்கள் ஈரோட்டில் செயல்படும் ஒரு பவுண்டேசனில் இருந்து வருகிறோம். நிதி கொடுங்கள் எனக் கேட்கின்றனர். நிதி தரவில்லை என்றால், தகாத வார்த்தை யால் திட்டி விட்டு செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது, வீட்டிற்கு வெளியிலுள்ள பொருட்களை எடுத்து செல்கின்றனர். மேலும், சாலையில் செல்பவர்களிடம் வசூலில் ஈடுபடுகின்றனர். இவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.