உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புட்டிரெட்டிப்பட்டியில் தடம் புரண்ட ரயில்வே கிராசிங் மாற்றும் மிஷின்

புட்டிரெட்டிப்பட்டியில் தடம் புரண்ட ரயில்வே கிராசிங் மாற்றும் மிஷின்

பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம், புட்டிரெட்டிப்பட்டியில், ரயில்வே கிராசிங்குகளை மாற்றியமைக்கும் மிஷின் வந்த வண்டி தடம் புரண்டது.சேலம் ரயில்வே கோட்டம், பொம்மிடி அடுத்த புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே ஸ்டேஷனிலுள்ள ரயில்வே கிராசிங்குகளை மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது. நேற்று காலை இதற்காக பிரத்தியேக ரயில்வே கிராசிங் மாற்றும், டி - 28 மிஷின் சென்னையிலிருந்து வந்தது. இதன் மூலம் ரயில்வே ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்த மிஷின் உள்ள வண்டி, லுாப் லைனில் சென்றபோது, மதியம், 12:50 மணிக்கு, 2 சக்கரங்கள் தடம் புரண்டதால், ரயில்வே ஸ்டேஷனில் சிக்னல்கள் இயங்கவில்லை. இதனால், கோவை- - சென்னை, சென்னை- - கோவை ஆகிய மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் மொரப்பூர், பொம்மிடியில் நிறுத்தப்பட்டன. பின் ஒருவழிப்பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன. சேலம் கோட்ட பொறியாளர் அன்கித்வர்மா, உதவி கோட்ட பொறியாளர் அவினாஷ் மீனா, பொம்மிடி உதவி பொறியாளர் ஜவகர், இளநிலை பொறியாளர் சீனிவாசன், காளியப்பன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்தனர்.இவர்களின் மேற்பார்வையில், ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய மிஷின் ஏற்றிய வண்டியை தண்டவாளத்தில் துாக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஈரோட்டிலிருந்து ரயில்வே மீட்பு படையினரும் வந்து, 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மாலை, 4:10 மணிக்கு தடம் புரண்ட வண்டியை தண்டவாளத்தில் ஏற்றி நிறுத்தினர். இப்பணியின்போது, ரயில்வே கேட் மூடப்பட்டதால், கடத்துார், -அரூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ