மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
19 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
19 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
19 hour(s) ago
பாப்பாரப்பட்டி:தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே, மேல்எண்டபட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம், 63; விவசாயி. நேற்று மதியம் 12:00 மணிக்கு டி.வி.எஸ்., மொபட்டில் தர்மபுரி நோக்கி சென்றார். எதிர் திசையில் பாப்பாரப்பட்டியை நோக்கி, 'யமஹா ஆர் 15' பைக்கில் இரு சிறுவர்கள் வந்தனர். தர்மபுரி - பாப்பாரப்பட்டி சாலையில், எண்டபட்டி பஸ் நிறுத்தம் அருகே திடீரென சிறுவர்கள் பைக்கை, 'வீலிங்' செய்ய முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக், விவசாயி மாணிக்கம் மொபட் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இரு சிறுவர்களும் அங்கிருந்து தப்ப முயன்றதில், ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்; மற்றொருவர் தப்பி விட்டார். பிடிபட்ட சிறுவன் அரசு பள்ளியில் பிளஸ் 1 படிப்பதாகவும், தப்பியவர் சக மாணவன் என்பதும் தெரியவந்தது. பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago