பெண் மாயம்; வாய்க்காலில் தேடிய தீயணைப்பு துறையினர்
போச்சம்பள்ளி,: போச்சம்பள்ளி அடுத்த, மருதேரி, காவாப்பட்டியை சேர்ந்தவர் வசந்தா, 50; இவர் அதே பகுதியில் உள்ள சரவணன் என்பவரின் தேங்காய் மண்டியில் கொப்பரை தேங்காய் சேகரிக்கும் பணி செய்து வருகிறார். நேற்று காலை, 4:00 மணிக்கு வழக்கம்போல உடல் உபாதையை கழிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. மகன் கவுதம், 23, தாய் வசந்தாவை தேடினார். தென்பெண்ணை ஆறு நெடுங்கல் தடுப்பணையிலிருந்து பாரூர் பெரிய ஏரிக்கு செல்லும் வாய்க்காலில் சறுக்கி விழுந்திருக்கலாம் என்ற சந்தே-கத்தின் படி, நாகரசம்பட்டி போலீசார், போச்சம்பள்ளி தீய-ணைப்புத் துறையினர் உதவியுடன் செல்லம்பட்டி பகுதியிலி-ருந்து, பாரூர் பெரிய ஏரி வரை தண்ணீர் செல்லும் வாய்க்காலில் தேடி வருகின்றனர்.