உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசின் வரும் முன் காப்போம் திட்டம் மாரண்டஹள்ளியில் சிறப்பு முகாம்

அரசின் வரும் முன் காப்போம் திட்டம் மாரண்டஹள்ளியில் சிறப்பு முகாம்

பாலக்கோடு, மாரண்டஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு முன்னிலை வகித்தார். முகாமில் பொது மருத்துவம், கண் மருத்துவம், பல், எலும்பு முறிவு சிகிச்சை, இருதய பரிசோதனை, மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலம், காசநோய் பிரிவு, தோல்நோய், யோகா மற்றும் சித்த மருத்துவம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளை சார்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில், 1,130 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, குறைபாடு உடையோருக்கு சிகிச்சை அளித்தனர். மேலும், 30 நபர்களுக்கு சிறுநீர் பரிசோதனை, ரத்த பரிசோதனை, காசநோய், எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கார்த்திகேயன், சுகந்தி உள்பட, மருத்துவர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை