உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர் முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர் முகாம்

அரூர்: அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்-துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., சின்னுசாமி தலைமை வகித்தார். இதில், தாசில்தார் பெருமாள், மாற்றுத்திறனாளிகள் நலத்-துறை, வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள், 5 பேருக்கு பட்டா வழங்க உத்தரவிட்டும், இதுவரை வழங்காமல் காலதா-மதம் செய்வதாகவும், இலவச வீட்டு மனைப்பட்டாவுக்கு விண்-ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளிடம் காலியிடத்தை நீங்களே கண்டுபிடித்து கொடுங்கள் என, வருவாய் துறையினர் கூறுவதாகவும் புகார் தெரிவித்த மாற்றுத்திறனாளிகள், அரூர் டவுன் பஞ்., கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் கடைகள் ஒதுக்க வேண்டும், அரூர் இந்தியன் வங்கியில் மாற்றுதிறனாளிகளுக்கு, தனி வரிசை அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளை அவமரியாதையாக பேசி வரும், வங்கி அலுவலர்கள் மீது நடவ-டிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தனி வரிசை மூலம், சிகிச்சை அளிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை