உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4,100 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4,100 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்:காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததாலும், கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.இதையடுத்து நேற்று முன்தினம் காலை, கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 4,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 554 கன அடி நீரும் என இரு அணைகளில் இருந்து, தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு, 4,554 கன அடியாக உள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு வினாடிக்கு, 4,000 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று மாலை 5:00 மணிக்கு வினாடிக்கு, 4,100 கன அடியாக அதிகரித்து வந்தது. இதனால் மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ் அதன் கிளை அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணியர் அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் காவிரியாற்றின் அழகை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை