நாடக கலைஞரை அடித்து கொன்ற தாய், மகன் கைது
தொப்பூர் : ஆசைக்கு இணங்க வற்புறுத்திய நாடகக் கலைஞரை அடித்துக்கொன்ற, பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, தாசன்கொட்டாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர் மணி, 60. இவருக்கு மனைவி, இரு மகன்கள், மகள் உள்ளனர். பிப்., 22-ம் தேதி அதிகாலை சாமிசெட்டிப்பட்டி - -ஜருகு சாலையில், தாசன்கொட்டாய் பாலம் அருகே தலையில் பலத்த காயமடைந்து நிலையில் மணி இறந்து கிடந்தார். தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி, தாசன்கொட்டாயைச் சேர்ந்த காமாட்சி, 49, அவரது மகன் பழனிசாமி, 23, ஆகிய இருவரை கைது செய்தனர்.விசாரணையில், மணி, காமாட்சிக்கு பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த காமாட்சியின் மூத்த மகன் பழனிசாமி, கடந்த, 21ம் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது, அங்கு சென்ற மணி, மதுபோதையில், காமாட்சியிடம் ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். ஆத்திரமடைந்த காமாட்சி, பழனிசாமி இருவரும் சேர்ந்து, தலையில் கட்டையால் தாக்கியதால், படுகாயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.