உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சர்வீஸ் சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

சர்வீஸ் சாலையில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

தர்மபுரி: தர்மபுரி அருகே, சர்வீஸ் சாலையில் தேங்கி நிற்க்கும் மழை-நீரால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வரு-கின்றனர்.தர்மபுரி அடுத்த சோகத்துாரில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்-தினர் வசிக்கின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலத்தின் அருகில் சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டது. முறையான உயரம் மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால், மழை நேரங்களில், இச்சாலையில் அடிக்கடி மழைநீர் தேங்கி, இச்சாலை தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. இவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, அதிகாரிகளிடம் பல-முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்த சர்வீஸ் சாலையில் தேங்கும் மழைநீரை அகற்ற, சம்மந்தப்பட்ட அதிகா-ரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை