மேலும் செய்திகள்
6ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
04-Sep-2024
தர்மபுரி: தர்மபுரியில், பல்வேறு தொழில் நிறுனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், பகலில் மின்வாரியத்துறையினர், முன் அறிவிப்பின்றி பல மணி நேரம் மின்தடை செய்து வருகின்றனர். கடந்த, 2 நாட்களாக தொடர்ந்து மின்தடையால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கனமழையின் போது மட்டுமே முன் அறிவிப்பின்றி மின்தடை ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது மழை பெய்யாத நேரத்திலும், தர்மபுரி நகரில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இவர்களின் நலன்கருதி, அறிவிக்கப்படாத மின்வெட்டை சீரமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மின்நுகர்வோர் வேண்டுகோள் விடுத்தனர்.
04-Sep-2024