உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரயில்வே கேட் பராமரிப்பு

ரயில்வே கேட் பராமரிப்பு

ரயில்வே கேட் பராமரிப்புபாப்பிரெட்டிப்பட்டி, நவ. 7---தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட் வழியாக தாளநத்தம், அய்யம்பட்டி, வேப்பிலைபட்டி, கேத்துரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பஸ், பைக், மூலம் தர்மபுரி, அரூர், கடத்துார் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட்டில், 2 ரயில்‍வே பாதைகளுக்கும் இடையேயான கான்கிரீட் தரைத்தளம் சீராக இல்லாமல் மேடும், பள்ளமுமாக இருக்கிறது.இதனால், போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். நேற்று, சேலம் ரயில்வே உதவி கோட்ட பொறியாளர் சஞ்சீவி, பகுதி உதவி பொறியாளர் ஜவஹர், இளநிலை பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் மேற்பார்வையில் பராமரிப்பு பணி நடந்தது.இதனால், காலை 9:30 மணி முதல், மாலை 5:30 வரை கேட் மூடப்பட்டது. அவ்வழியே வரும், 10 பஸ்கள் நிறுத்தப்பட்டு, 10 கி.மீ., சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் அரூர், தர்மபுரி, பொம்மிடி செல்லும் மக்கள் அவதிக்கு ஆளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை