| ADDED : ஜூலை 28, 2024 04:05 AM
தர்மபுரி: சட்ட விரோதமாக, ரேஷன் அரிசி கடத்தியவரை, உணவுபொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தல் சம்மந்தமாக, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் கடந்த, 24 அன்று தர்மபுரி மாவட்ட எல்லை பகுதியான பஞ்சப்பள்ளி-தேன்கனிகோட்டை சாலையில், நல்லம்பட்டியில், தர்மபுரி எஸ்.ஐ., அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில், ஈடுபட்டிருந்தனர். அப்-போது, அவ்வழியாக வந்த, கர்நாடக மாநில பதிவெண் கொண்ட மாருதி ஆம்னி காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், 1 டன் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கடத்தியது தெரியவந்தது.ரேஷன் அரிசி கடத்திய கர்நாடகா மாநிலம், கொல்லஹள்ளியை சேர்ந்த பிரமோத், 22, என்பவரை விசாரணை செய்ததில், ரேஷன் அரிசியை கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஓட்டல்களுக்கு விற்-பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, பிரமோத் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.