உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சுதந்திர தினத்தையொட்டி மரக்கன்று நட்ட மாணவர்கள்

சுதந்திர தினத்தையொட்டி மரக்கன்று நட்ட மாணவர்கள்

தர்மபுரி: சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, அரசு பள்ளி மாணவர்கள் அருகே இருந்த ஏரிக்கரையில் மரக்கன்றுகளை நட்டனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சோமனஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நாடு முழுவதும் நேற்று முன்தினம், 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று முன்தினம் சோமனஹள்ளியில் உள்ள ஏரியில், 100 மரக்கன்றுகள் நடும் திட்டம், இப்பகுதி பொதுமக்கள் உதவியால் தொடங்கப்பட்டது. அதன்படி, சோமனஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி பசுமைப் படை மாணவ, மாணவியர், பள்ளி தலைமை ஆசிரியர் மாதேஸ்வரன் தலைமையில் மரக்கன்றுகளை நட்டனர். இதில், புங்கன், வேம்பு, பனை, அரச மரக்கன்று உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை நட்டனர். இப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை