உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் சப் டிவிஷனில் உரிமமுள்ள 137 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

அரூர் சப் டிவிஷனில் உரிமமுள்ள 137 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

அரூர், அரூர் சப் டிவிஷனில் உரிமம் வைத்துள்ள, 137 பேர் தங்களது துப்பாக்கிகளை சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தர்மபுரி மாவட்டம், அரூர் சப் டிவிஷனில் துப்பாக்கி வைத்திருக்க உரிமை பெற்றவர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார், கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி, அ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார் உள்ளிட்ட ஸ்டேஷன்களில், 137 பேர் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்தனர். இன்னும், ஒரு துப்பாக்கி மட்டும் ஒப்படைக்க வேண்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி