மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
20 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
20 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
20 hour(s) ago
அரூர், அரூர் கொங்கு வேளாளர் கவுணடர்கள் திருமண மண்டபத்தில், தீரன் சின்னமலை, 219வது நினைவு நாள் விழா நடந்தது. தர்மபுரி கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சங்க தலைவரும், வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான சந்திசேகரன் தலைமை வகித்தார். தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பழனியப்பன் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்தார். விழாவில், நடிகர் ரஞ்சித், கொ.ம.தே.க., மாநில கொள்கை பரப்பு செயலாளர் அசோகன், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்முருகன், தி.மு.க., மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதே போல், கீரைப்பட்டியில் அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் தலைமையில், தீரன் சின்னமலை சிலைக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago