உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 1 டன் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

1 டன் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

தர்மபுரி, ஆக. 22-தர்மபுரி மாவட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று மதியம், 12:30 மணிக்கு காரிமங்கலம் -- பாலக்கோடு சாலையில், காரிமங்கலம் ரம்யா தியேட்டர் எதிரில், எஸ்.ஐ., கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது, அவ்வழியாக வந்த டாடா ஏஸ் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.இதில், 1,040 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. இதில், இருமத்துாரை சேர்ந்த டிரைவர் அன்பழகன், 42, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், ராமேநத்தத்தை சேர்ந்த அரவிந்த், 23, ஆகியோர் ரேஷன் அரிசியை கடத்திய தெரிந்து, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ