உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பைக் விபத்தில் தொழிலாளி பலி

பைக் விபத்தில் தொழிலாளி பலி

மதிகோன்பாளையம், ஜூன் 30-தர்மபுரி மாவட்டம், மூக்கனுார் அடுத்த எம்.ஒட்டப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி குமரேசன், 33; இவர் கடந்த, 27 அன்று மாலை, 3 மணிக்கு அவருடைய பஜாஜ் பல்சர் பைக்கில் தின்னப்பட்டி செல்லும் சாலையில் அதிவேகமாக சென்றார். அப்போது, சாலையின் இடது புறமிருந்த கல்லின் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில், படுகாயமடைந்தவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் அன்றிரவு, 11:00 மணிக்கு இறந்தார். மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி