உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 108 திருவிளக்கு பூஜை

108 திருவிளக்கு பூஜை

வெண்ணந்துார்:வெண்ணந்துார் யூனியன், பல்லவன்நாயக்கன்பட்டி பஞ்., பி.மேட்டூர் மகா சக்தி மாரியம்மன் மற்றும் செல்வ விநாயகர் திருவிழாவை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. இதையொட்டி மகாசக்தி மாரியம்மன் மற்றும் செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. இதையடுத்து நடந்த, 108 திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்று, மகா சக்தி மாரியம்மன் மற்றும் செல்வ விநாயகரை வழிபட்டனர். இதில், பல்லவன்நாயக்கன்பட்டி பஞ்., பி.மேட்டூர் பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ