இளம்பெண் உட்பட 2 பேர் மாயம்
அரூர்:அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டியை சேர்ந்தவர் வேதமாஸ்ரீ, 23, பி.இ., படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 18ல் வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.இதேபோல், அரூர் அடுத்த எச்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த, 18, வயது சிறுமி பிளஸ் 2 படித்து விட்டு, எச்.தொட்டம்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 17ல் பகல், 12:30 மணிக்கு வீட்டிலிருந்து மாயமானார். இரு சம்பவங்கள் குறித்தும் அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.*