மேலும் செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைக்கு 'சீல்'
19-Sep-2024
புகையிலை பொருள் விற்ற2 கடைகளுக்கு 'சீல்'பாப்பிரெட்டிப்பட்டி, அக். 2---தர்மபுரி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா உத்தரவின் படி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமணன், அருண், போலீசார் இளம்பருதி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி, சிக்கம்பட்டி, கொப்பக்கரை, ஆகிய பகுதியில் உள்ள மளிகை, பெட்டிக்கடைகள் உள்ளிட்ட, 40 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், இரண்டு கடைகளில், 5,00 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு கடைகளுக்கும் தலா, 25,000 ரூபாய் என, 50,000 ரூபாய் அபராதம் விதித்து, கடைக்கு 'சீல்' வைத்தனர்.
19-Sep-2024