உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நர்சிங் மாணவர் உட்பட 3 பேர் மாயம்

நர்சிங் மாணவர் உட்பட 3 பேர் மாயம்

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மதிவாணன். இவரது மகன் ஸ்ரீதர், 22. தர்மபுரியில் உள்ள தனியார் கல்லுாரியில் நர்சிங் படித்து வருகிறார். கடந்த, 12ல் மதியம் வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இதேபோன்று கடத்துார் லிங்கநாய்க்கனஹள்ளியை சேர்ந்தவர் காளியப்பன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுமதி, 50. காளியப்பன் தாய் கடந்த, 8ல் இறந்தார். இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு காளியப்பன் தங்கை வரக்கூடாது என சுமதி கூறி இருந்தால், அதையும் மீறி வந்ததால், 8ல் மாலை வீட்டில் இருந்து சுமதி மாயமானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.மணியம்பாடியை சேர்ந்தவர் மணியன். லாரி டிரைவர். இவரது மகள் வேதா ஸ்ரீ, 22. இவர் பி.காம்., முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 12ல் மதியம் வீட்டில் இருந்து தர்மபுரி சென்றவர் மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதன்படி, மேற்கண்ட, 3 சம்பவங்களிலும் கடத்துார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை